தமிழகத்தில் கனமழை: பாடசாலைகளுக்கு விடுமுறை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில், தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கடும் மழையானது எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதிவரை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் வாகன ஓட்டுநர்களும், மக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் சென்னையில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று பெய்த கடுமழையினால் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.