Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரட்டை இலைச் சின்ன விவகாரம்: நாளை மீண்டும் விசாரணை!

In இந்தியா
Updated: 04:58 GMT, Oct 31, 2017 | Published: 04:58 GMT, Oct 31, 2017 |
0 Comments
1294
This post was written by : Risha

இரட்டை இலைச் சின்ன விவகாரம் தொடர்பான ஐந்தாம் கட்ட விசாரணை டெல்லி தலைமை தேர்தல் ஆணையகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவிருந்த போது கட்சியின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்திற்கு முதல்வர் அணியும், டி.டி.வி.தினகரன் அணியும் உரிமை கோரியது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையம் ஆரம்பித்தது.

அதன்படி இதுவரை நான்குகட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. நான்காம் கட்ட விசாரணை நேற்று நடைபெற்றிருந்தது.

இதன்போது தினகரன் தரப்பின் வாதங்கள் நீண்டதால் அதற்கு ஓ.பி.எஸ். தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு குழப்ப சூழ்நிலை உருவானது. இதனையடுத்து வழக்கு விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg