Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவே தீர்மானிப்பார், எம்மால் முடியாது – குமார வெல்கம

In இலங்கை
Updated: 09:04 GMT, Oct 31, 2017 | Published: 05:21 GMT, Oct 31, 2017 |
0 Comments
1111
This post was written by : Arul Jesu
welgama

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சிசபை தேர்தலில் போட்டியிடுவதா? இல்லை தனித்து போட்டியிடுவதா? என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது வரை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தவிடயம் குறித்த தீர்மானத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இந்திய விஜயத்தை நிறைவு செய்த பின்னர் தீர்மானிப்பார் என அவர் மேலும் கூறினார்.

பதுளை – வியலுவ பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, குமார வெல்கம இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கட்சியை பாதுகாக்க எந்தவொரு தரப்பினருடனும் பகிரங்கமாக பேச தயார் என அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg