Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட ஒப்பந்தத்தில் மக்ரோங் கையொப்பமிட்டார்

In ஐரோப்பா
Updated: 05:22 GMT, Oct 31, 2017 | Published: 05:22 GMT, Oct 31, 2017 |
0 Comments
1199
This post was written by : Suganthini

பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட ஒப்பந்தத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் கையொப்பமிட்டுள்ளார்.

பிரான்ஸில் சுமார் இரண்டு வருடங்களாக அமுலிலிருந்த அவசரகால நிலைமை நேற்று (திங்கட்கிழமை) முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தில் அவர் கையொப்பமிட்டுள்ளார்.

இந்தப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு ஆதரவாக 415 உறுப்பினர்களும் எதிராக 127 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். இதேவேளை, 19 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி பரிஸில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதலில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, பிரான்ஸில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.

பிரான்ஸில் இதுவரையில் 6 தடவைகள் அவசரகால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு பிரான்ஸிலுள்ள பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்தபோதிலும், மனித உரிமை குழுக்கள் இதைக் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg