Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா மரணம் தொடர்பில் 15 பேருக்கு நோட்டீஸ்

In இந்தியா
Updated: 05:22 GMT, Oct 31, 2017 | Published: 05:22 GMT, Oct 31, 2017 |
0 Comments
1537
This post was written by : Risha

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களிடமிருந்து விளக்கம் கிடைத்த பின்னர் விசாரணை ஆரம்பிக்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் தொடர்ந்து வந்த நிலையில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் தொடர்பில் நீதி விசாரணை கோரியிருந்தார்.

அதற்கென ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அது தொடர்பிலான விசாரணைகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இவ்வாறாக நீதி விசாரணை நடத்தப்பட்டு மறைந்த முதல்வரின் மரணத்தில் தொடரும் மர்மங்களுக்கு வெகு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணைகள் தொடர்ந்து தாமதமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg