தொடர்ச்சியாக பொய் கூறி சிக்கலில் விழுந்த ஜூலி!

பிக் பொஸ் புகழ் ஜூலி, ஹரிஷுடன் தொலைபேசியில் பேசி வருவதாக பொய் கூறி சமூக வலைத்தளங்களில் சிக்கிக் கொண்டுள்ளார். ‘நான் ஹரிஷ் கல்யாணுடன் அடிக்கடி போனில் பேசி வருகிறேன்’ என்று ஜூலி தெரிவித்தார்.
இதற்கு ‘ஜூலி என்னுடன் அடிக்கடி போனில் எல்லாம் பேசவில்லை. பிக் பொஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் ஒரேயொரு முறை தான் பேசினார். அவர் பொய் சொல்கிறார்’ என்று ஹரிஷ் கல்யாண் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ‘நான் ஓவியாவுடன் நட்பாகி விட்டேன். அவருடன் அடிக்கடி போனில் பேசுகிறேன்’ என்று முன்பு ஜூலி தெரிவித்தார். பின்னர் ‘நான் யாருடனும் போனில் பேசவில்லை’ என்று ஓவியா உறுதியாக கூறியிருந்தார்.
ஜல்லிக்கட்டுக்காக போராடிய பெண் என்ற பெயர் போய், போலி என்ற பெயர் வாங்கிய ஜூலி. பிக் பொஸ் வீட்டில் இருந்தபோது அவர் போலியாக நடந்து கொண்டதாக சக போட்டியாளர்கள் தெரிவித்திருந்ததுடன் மக்கள் மத்தியிலும் போலியானவர் என்ற பெயரை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.