Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகாத்மா காந்தி கொலை குறித்து விசாரிக்க கொள்ளுப்பேரன் எதிர்ப்பு!

In இந்தியா
Updated: 08:52 GMT, Oct 31, 2017 | Published: 08:52 GMT, Oct 31, 2017 |
0 Comments
1283
This post was written by : Risha

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொலை தொடர்பில் மீண்டும் விசாரணை நடத்துவதற்கு அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) மனு தாக்கல் செய்துள்ளார்.

காந்தி கொல்லப்பட்டு ஏழு தசாப்தங்கள் கடந்த நிலையில், அவரது கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மும்பையை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

காந்தியின் கொலையுடன் தொடர்புடைய 3ஆவது சந்தேகநபர் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் அதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அவரது கொள்ளுப் பேரன் துஷார் காந்தி உச்சநீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg