Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாதத்தை தூண்டிவிடும் அண்டை நாட்டின் முயற்சி முறியடிப்பு: ராஜ்நாத் சிங்

In இந்தியா
Updated: 08:55 GMT, Oct 31, 2017 | Published: 08:55 GMT, Oct 31, 2017 |
0 Comments
1191
This post was written by : Risha

நமது நாட்டிற்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிடும் அண்டை நாட்டின் முயற்சி, பாதுகாப்பு படையினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய பொலிஸ் அகடமியின் பயிற்சி நிறைவுநாள் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ”பயங்கரவாதம், தீவிரவாத கருத்துக்கள் போன்ற சவால்களை உலகம் தற்போது எதிர்கொண்டு வருகிறது.

அந்தவகையில் இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிட அண்டை நாடொன்று முயற்சித்து வருகிறது. ஆனால், இந்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு படைகளினால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளன.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இந்திய அரசுக்கு அண்மைக் காலத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg