Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் முதல் பெண் பிரதமரின் நினைவு நாள்

In இந்தியா
Updated: 09:02 GMT, Oct 31, 2017 | Published: 09:02 GMT, Oct 31, 2017 |
0 Comments
1263
This post was written by : Risha
rahul_manmohan31

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் 33ஆவது நினைவுதினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான இந்திரா காந்திக்கு அஞ்சலிகள் என இந்திய தேசிய காங்கிரஸின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு இதே நாளில் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg