Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் எதிரொலி

In இலங்கை
Published: 09:05 GMT, Oct 31, 2017 |
0 Comments
1270
This post was written by : Arul Jesu

யாழ். பல்கலைக்கழகத்தின் கலை, முகாமைத்துவம், விஞ்ஞானம் மற்றும் வணிகம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை அறிவுறுத்தியுள்ளது.

துணைவேந்தருடன், பீடாதிபதிகள் இன்று நடத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்குள் எந்தவொரு மாணவரும் உட்புக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேற்குறிப்பிடப்பட்ட பீடங்களை சேர்ந்த மாணவர்கள் நாளை பிற்பகல் நான்கு மணிக்கு முன்னர் தமது விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அநுராதபுரத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தமிழ் அரசியல் கைதிகள் உட்பட ஏனைய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நேற்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தமக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

IMG-1316

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg