Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புவனேஸ்வர் குமார், பூம்ராவுக்கு ரோஹித் ஷர்மா பாராட்டு

In கிாிக்கட்
Updated: 09:01 GMT, Oct 31, 2017 | Published: 09:01 GMT, Oct 31, 2017 |
0 Comments
1480
This post was written by : Elakkiya

புவனேஸ்வர் குமார் மற்றும் பூம்ரா ஆகியோர் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் என இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்ட ரோஹித் ஷர்மா நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இறுதிக் கட்டத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடிய இரண்டு பந்து வீச்சாளர்கள் எம்மிடம் உள்ளனர். அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருவரின் பந்து வீச்சையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த போட்டியில் கூட இருவரும் சிறப்பாகவே பந்து வீசினர். பனிப்பொழிவின் காரணமாக ஈரப்பதன் ஏற்பட்டு பந்தை சரியாக பிடித்து வீச முடியவில்லை. அது மட்டுமின்றி ஆடுகளத்தன்மை மற்றும் சூழலில் கடைசி 4 ஓவர்களில் 35 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்பது எளிதான விடயமே. இத்தகைய நெருக்கடியான சூழலிலும் இருவரும் செம்மையாக செயற்பட்டு வெற்றியை தேடித்தந்தனர்” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg