Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லா லிகா தொடரில் ரியல் மட்ரிட் அதிர்ச்சித் தோல்வி

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:06 GMT, Oct 31, 2017 | Published: 09:04 GMT, Oct 31, 2017 |
0 Comments
1200
icon_com
This post was written by : Elakkiya
201710302005019929_La-liga-Girona-beats-real-Madrid_SECVPF

கால்பந்து விளையாட்டில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ரியல் மட்ரிட் ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் லா லிகா தொடரில், கதலோனியாவின் ஜிரோனா அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டியில், 2:1 என்ற கோல் கணக்கில் ஜிரோனா வெற்றி பெற்றது.

மிகவும் விறுவிறுப்பாகவும் எதிர்பார்ப்பு மிக்க போட்டியாகவும் அமைந்த இந்த போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் ரியல் மட்ரிட் அணி வீரர் இஸ்கோ கோல் அடித்தார். அதன்பின்னர் எந்த ஒரு வீரரும் கோல் அடிக்கவில்லை என்ற நிலையில் முதல்பாதி ஆட்டத்தில் 1:0 என்ற ரீதியில் ரியல் மட்ரிட் முன்னிலை பெற்றிருந்தது. இதன் காரணமாக ரியல் மட்ரிட்டுக்கே வெற்றி என்று இரசிர்கள் மத்தியில் எதிர்பர்க்கப்பட்டது.

இந்த எதிர்பார்ப்புக்களை தகர்த்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஜிரோனா அணி வீரர்கள் வெற்றியை நிலைநாட்டினர். முறையே 54 மற்றும் 58 ஆவது நிமிடத்தில் கோல் அடித்த ஜிரோனா அணி 2:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் மட்ரிட் வீரர்களின் கோல் முயற்சிகள் யாவும் இலாவகமாக தடுக்கப்பட்டது.

இறுதியில், 2-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று ரியல் மட்ரிட் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது ஜிரோனா அணி.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg