Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடியேற்றவாசிகளை பொறுப்பேற்குமாறு அவுஸ்ரேலியாவுக்கு வலியுறுத்து

In உலகம்
Published: 09:08 GMT, Oct 31, 2017 |
0 Comments
1112
This post was written by : Suganthini
newgunia

பப்வுவா நியூகினியா, மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள குடியேற்றவாசிகளை பொறுப்பேற்றுக்கொள்ளக் கோரி, சிட்னியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி தடுப்பு முகாமிலுள்ள குடியேற்றவாசிகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை அவுஸ்ரேலிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், அவர்களின் பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்றத்துக்கும் அவுஸ்ரேலிய அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டுமெனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மனுஸ் தீவிலிலுள்ள தடுப்பு முகாமை இன்று (செவ்வாய்க்கிழமை) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அம்முகாமிலிருந்த சுமார் 600 பேரை வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகாமிலிருந்து வெளியேறுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள குடியேற்றவாசிகள், ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

படகுகள் மூலம் வரும் குடியேற்றவாசிகளுக்கு புகலிடக் கோரிக்கை வழங்குவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் மறுத்துவருகின்றது. இவ்வாறு வரும் குடியேற்றவாசிகள், பப்புவா நியூகினியா மற்றும் நவூரு தீவிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg