Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதியுச்ச அதிகாரத்தை வழங்குவோம் – ஆனால் வடக்கு கிழக்கை இணைக்கமாட்டோம்! – சு.க

In இலங்கை
Updated: 09:10 GMT, Oct 31, 2017 | Published: 09:10 GMT, Oct 31, 2017 |
0 Comments
1266
This post was written by : Varshini

”இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். அதுவே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும். ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (திங்கட்கிழமை) அரசியலமைப்பு சபையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் உரையாற்றியபோதே நிமால் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

குறிப்பாக, தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் முதல் 9 உறுப்புரைகளிலும் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளக் கூடாதென்றும், ஒற்றையாட்சியும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையும் அதன் மூலம் பேணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைகளின் அதிகாரத்தை ஆளுநர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்ற மாகாண முதலமைச்சர்களின் கோரிக்கையை ஆமோதித்துப் பேசிய நிமால் சிறிபால டி சில்வா, தமது நிலைப்பாடும் அதுவே என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg