Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘காலா’ திரைப்படம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு!

In சினிமா
Published: 09:48 GMT, Oct 31, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Surenth
kaala

‘காலா’ திரைப்படத்தைத் தடை செய்யக் கோரி சென்னை மாநகர நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ திரைப்படத்தை தடை செய்யக்கோரி, சென்னை 4ஆவது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழ்மை) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி தமிழரசி, இது காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு நீதிமன்றம் குறி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

காலா திரைப்படத்தின் தலைப்பு, கதைக் கரு தன்னுடையது எனவும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996 ஆம் ஆண்டே காலா பெயரை தான் பதிவு செய்திருப்பதாக குறித்த நபர் தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ராஜசேகரன் என்பவரை யாரென்றே தெரியாது என்று ரஜினி தரப்பில் கூறப்பட்டதுடன் இது விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்றும் ரஜினி, ரஞ்சித் தரப்பால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg