Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா- இத்தாலி இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

In இந்தியா
Published: 10:27 GMT, Oct 31, 2017 |
0 Comments
1077
This post was written by : Risha
in

இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையே ரயில்வே பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இத்தாலி பிரதமர் பாலோ ஜென்ட்டிலோனியின், டெல்லிக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின்போதே இவ் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அரச பயணம் மேற்கொண்டு நேற்று முன்தினம் டெல்லி வந்த இத்தாலி பிரதமர், நேற்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

அதற்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இத்தாலி பிரதமர், குழு நிலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு கேரளாவில் இரண்டு இத்தாலி கடற்படை வீரர்கள் இந்திய மீனவர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து சுமார் ஒரு தசாப்த காலத்தின் பின்னர் இத்தாலி பிரதமர் ஒருவர் இந்தியாவிற்கு விஜயம் செய்தமை இதுவே முதல் முறையாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg