Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குற்றச்சாட்டுகளை கதலோனிய துணைத் தலைவர் நிராகரித்துள்ளார்

In
Updated: 09:16 GMT, Oct 31, 2017 | Published: 09:16 GMT, Oct 31, 2017 |
0 Comments
1235
This post was written by : Suganthini

சர்ச்சைக்குரிய கதலோனிய சுதந்திரப் பிரகடனத்தைத் தொடர்ந்து, கதலோனியத் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கிளர்ச்சி மற்றும் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை, கதலோனியாவின் முன்னாள் துணைத் தலைவர் ஓரியல் ஜுன்குவாரஸ் (Oriol Junqueras)  நிராகரித்துள்ளார்.

அரசியலமைப்பு நடவடிக்கைகளை கதலோனியத் தலைவர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறி, கிளர்ச்சி மற்றும் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை ஸ்பெய்னின் அரச ( வழக்கறிஞர் ஜோஸ் மானுவல் மாஸா  (Jose  Manuel Maza) சுமர்த்தியுள்ளார்.

சட்டவிரோதமாகக் கருதப்படும் வாக்கெடுப்பை நடத்தி, நிதியை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டும் கதலோனியத் தலைவர்கள் மீது பதிவு செய்யப்படும் எனவும் வழக்கறிஞர் மாஸா தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்ன் சட்டப்படி இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிபதியால் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg