Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனிச்சிங்களத்திற்கு எதிரான போராட்டமே தமிழீழம் வரை சென்றது – கிரியெல்ல

In இலங்கை
Updated: 16:00 GMT, Oct 31, 2017 | Published: 09:15 GMT, Oct 31, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Varshini
luxman-kiriyella

இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினையில் இரு பிரதான கட்சிகளுமே தவறிழைத்துவிட்டதெனக் குறிப்பிட்டுள்ள உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தனிச் சிங்களத்திற்கு எதிரான போராட்டமே தமிழீழம் வரை சென்றதென கூறியுள்ளார்.

அரசியலமைப்பு சபையில், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் அரசியலமைப்பு உருவாக்கங்கள் இடம்பெற்ற போதிலும், அதில் தமிழ் மக்களின் பங்களிப்பு இடம்பெற்றிருக்கவில்லை. தற்போது அனைவரது பங்களிப்பும் கிடைத்திருக்கின்ற நிலையில், அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போதே இலங்கையின் தனித்துவம் பாதுகாக்கப்படும் என்றும், அதனை கருத்திற்கொண்டு செயற்படுவது அவசியம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg