Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்ப்பின் விஜயத்தால் உறவு பலப்படுத்தப்படும் – சீனா

In உலகம்
Updated: 09:20 GMT, Oct 31, 2017 | Published: 09:20 GMT, Oct 31, 2017 |
0 Comments
1121
This post was written by : Suganthini

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சீனாவுக்கான விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு பலப்படுத்தப்படுமென்று எதிர்பார்த்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சு நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறியுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘அமெரிக்காவுடனான உறவுக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கின்றது. இந்நிலையில், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அழைப்புக்கிணங்க, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சீனாவுக்கு கூடிய விரைவில் வருகை தரவுள்ளார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் உறவை மேலும் கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளோம்.

இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பரமான முறையில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துதல், மக்களின்; உறுதியான நலன்களைப் பேணுதல் தொடர்பான செயற்றிட்டம் மற்றும் இரு நாடுகளுக்குமிடையில் சமாதானம், ஸ்திரத்தன்மையைப் பேணுதல் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் கட்டியெழுப்பப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg