Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவனின் பாதத்தை தமிழர்களுக்கு விட்டுக்கொடோம், திகாவின் கூட்டணிக்கு எதிராக ஆரப்பாட்டம்

In இலங்கை
Updated: 10:32 GMT, Oct 31, 2017 | Published: 10:29 GMT, Oct 31, 2017 |
0 Comments
1464
This post was written by : Arul Jesu
DSC02474

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மேலும் இரண்டு பிரதேச சபைகள் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கினிகத்தேனை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் உருவாக்கப்படும் மேலும் இரண்டு பிரதேச சபைகளினால் இங்கு வாழ்கின்ற மக்களுக்கிடையில் பாரிய பிளவுகள் ஏற்படும் என ஆர்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் தெரிவித்தனர்.

மலையக முற்போக்கு முன்னணியின் ஏற்பாட்டில் முன்னால் அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தாராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் நகரின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட கூடாது எனவும், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட கூடாது எனவும் ஹட்டன் நீதிமன்றம் உத்தரவு பிறபித்திருந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 50 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், சிவனொளிபாதமலை ஆலயம் தமிழர் பிரதேசத்திற்கு செல்லும் நிலை உருவாகுவதால் எதிர்காலத்தில் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு அமைச்சர்களான திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் தமிழ் முற்போக்கு கூட்டணியினரே காரணம் என அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தாராஜ் தெரிவித்தார்.

மலையகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டு சிவனொளிபாதமலையை பௌத்தர்களிடமிருந்து பிளவுப்படுத்த பிரதேச எல்லைகளை இவர்கள் பிரிக்க முற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

DSC02448 DSC02457 DSC02461 DSC02462 DSC02467

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg