Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியர் பயணித்த படகு கவிழ்ந்ததில் நால்வர் உயிரிழப்பு

In உலகம்
Published: 10:21 GMT, Oct 31, 2017 |
0 Comments
1142
This post was written by : Suganthini
boat

பங்களாதேஷ் நோக்கி ரோஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்று திடீரெனக் கவிழ்ந்ததில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரு சிறுவர்களும் ஆணொருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரத்தினால் செய்யப்பட்ட சிறிய படகில் 12 பேருக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ள வேளையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்தின்போது நீரில் மூழ்கிக் காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறை காரணமாக, அயல் நாடான பங்களாதேஷில் தஞ்சம் கோரும் ரோஹிங்கியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இதுவரையில் 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியர்கள் பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

இவ்வாறு பங்களாதேஷுக்கு தஞ்சம் கோரிச் சென்ற ரோஹிங்கியர்களின் படகுகள் கவிழ்ந்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg