Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேஷியாவில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

In உலகம்
Updated: 10:33 GMT, Oct 31, 2017 | Published: 10:33 GMT, Oct 31, 2017 |
0 Comments
1274
This post was written by : Suganthini

இந்தோனேஷியாவில் பயங்கரவாதிகள் இருவரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்தோனேஷியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பீமா நகருக்கு அண்மையிலான மலைப்பாங்கான பகுதியில் பொலிஸாரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, தம்மைக் கண்ட நான்கு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோட முற்பட்ட வேளையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் இருவர்    உயிரிழந்துள்ள அதேவேளை, இருவர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg