Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச மருத்துவ அதிகாரிகளின் தீர்மானம் மகிழ்ச்சியளிக்கிறது: நெவில் பெர்னாண்டோ

In இலங்கை
Published: 15:53 GMT, Oct 31, 2017 |
0 Comments
1065
icon_com
This post was written by : Vithushagan
nevil-415x260

சைட்டம் பிரச்சினை தொடர்பில் அரசின் தீர்மானத்தை  அரச மருத்துவ அதிகாரிகள்  ஏற்றுக்கொண்டமையை இட்டு தான் மகிழ்ச்சியடைவதாக சைட்டம் நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வைத்திய மாணவர்களினதும் கனவு தான் ஒரு விசேட வைத்திய நிபுணராக வரவேண்டும் என்பதால் அரசாங்க மருத்துவ பீட மாணவர்களை மீண்டும் கல்வி நடவடிக்கைகளிலும் பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தவேண்டுமென தான் GMOAவிடம் கோருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து, நாட்டினதும் மனவர்களினதும் எதிர்காலத்தை முன்னிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும், இலங்கையில் கல்வி கற்கக்கூடிய சுதந்திரத்தை உறுதிப்படுத்த கிடைத்தையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg