Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Published: 15:48 GMT, Oct 31, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : JudeDanish

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தொழிற்சங்கமான தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களினால் தலவாக்கலையில் இந்த பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் பழனி திகாம்பரத்தின் உருவ பொம்மை, தலவாக்கலை நகரில் அரசியல் இலாபத்திற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையில் முன்னெடுக்க்கப்பட்ட ஆர்பாட்டத்தின் போது எரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தி சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஹட்டனில் அமைந்துள்ள தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றம் செய்தது அமைச்சர் பழனி திகாம்பரமும், அவரின் அமைச்சும் தான் என குரோதம் நிலை அண்மைக்காலமாக தோன்;றியுள்ள நிலையில் காங்கிரஸிற்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தினருக்கும் இடையில் குரோத தன்மை வலுபெற்றுள்ளது.

இந்த நிலையில் இ.தொ.காவினர் நகரங்கள் தோறும் மக்களை இணைத்து ஆர்பாட்டங்களை செய்து வந்தனர்.ஆனால் கடந்த 29.10.2017 அன்று தலவாக்கலை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை இ.தொ.கா முன்னெடுத்த போது எமது அமைச்சரின் உருவ பொம்மை ஒன்று எறியூட்டப்பட்டது.  இதனை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

DSC02527
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg