Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

In இலங்கை
Updated: 17:24 GMT, Oct 31, 2017 | Published: 16:17 GMT, Oct 31, 2017 |
0 Comments
1367
This post was written by : Surenth

போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, போராட்டத்தை கைவிடவேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்திருக்கும் மாணவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை நடத்துவோம் என உறுதியாக கூறியுள்ள நிலையில், பல்கலைகழக நிர்வாகம் தமது தீர்மானத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று தொடக்கம் கதவடைப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

குறித்த போராட்டம் இன்றும் நடைபெற்ற நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், விஞ்ஞானபீடம், முகாமைத்துவ வணிக பீடம் ஆகியவற்றின் கல்வி செயற்பாடுகளை நிறுத்துவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று மாலை போராட் டத்தை நடத்திவரும் மாணவர்களுக்கும் பல்கலைகழக நிர்வாகத்திற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதன்போது, மாணவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என நிர்வாகம் கேட்டுக் கொண்ட போதும் மாணவர்கள் அதனை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg