Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் !

In இலங்கை
Updated: 16:59 GMT, Oct 31, 2017 | Published: 16:59 GMT, Oct 31, 2017 |
0 Comments
1317
This post was written by : Surenth

தாயக பிரதேசங்களில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா ஏ9 வீதியில் கடந்த 250 நாட்களாக நடந்து வரும் தமது போராட்டத்தை அரசாங்கமோ, தமிழ் தலைமைகளோ கருத்தில் கொள்ளாத நிலை காணப்படுவதாகவும் எனவே சர்வதேசமும், புலம்பெயர் சமூகமும் இதில் தலையிட்டு தமது பிள்ளைகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கந்தசுவாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி மணிக்கூட்டு கோபுர சந்தியை வந்தடைந்து கண்டி வீதி ஊடாக போராட்டம் இடம்பெற்ற வவுனியா ஏ9 வீதியில் பகுதியை வந்தடைந்தனர்.

‘அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் வருகையை எதிர்பார்த்து தாய்மார் தவம்’ என்ற தொனிப்பொருளில் பாதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC01049

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg