Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய வீரர் ஜேம்ஸ் பட்டின்சனுக்கு முதுகெலும்பு அறுவைச் சிகிச்சை!

In கிாிக்கட்
Published: 17:22 GMT, Oct 31, 2017 |
0 Comments
1097
This post was written by : elayathambi
james paddinson

அவுஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார். இச்சிகிச்சை அவரின் தொழில்முறை கிரிக்கட் வாழ்க்கையை அச்சுறுத்தும் வகையில் அமையலாம் என அஞ்சப்படுகிறது. முதுகெழும்பின் ஒரே இடத்தில்  தொடர்ச்சியாக ஏற்பட்ட உடைவுகளை அடுத்து,  இறுதி முயற்சியாக முதுகெலும்பு இணைவு அறுவைச் சிகிச்சைக்கு அவர் தயாராகியுள்ளார்.

இச் சிகிச்சைக்காக விரைவில் நியூஸிலாந்து செல்ல இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பட்டின்சனுடன் இணைந்து அவுஸ்ரேலிய கிரிக்கட் சபையின் மருத்துவப் பிரிவு  நியூஸிலாந்திலுள்ள வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

27 வயதான பட்டின்சனுக்கு முதுகெலும்பின் ஒரே இடத்தில் நான்கு முறை அழுத்த முறிவுகள் ஏற்பட்டிருந்தன. அவருடைய பந்து வீச்சு நுட்பம் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.  வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்படுவது பொதுவானது என்ற போதிலும், பட்டின்சனுக்கு ஏற்பட்டிருப்பது சற்றுச் சிக்கலானது என்பதால் இறுதி முயற்சியாக இந்த இணைவு அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg