Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் விராட் கோஹ்லி

In கிாிக்கட்
Published: 17:33 GMT, Oct 31, 2017 |
0 Comments
1297
This post was written by : S.K.Guna
Virat Kohli

இந்திய கிரிக்கெற் அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு வழிநடத்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, சர்வதேச கிரிக்கட் சபையின் ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை மீட்டெடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2:1 என்ற ரீதியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் விராட் கோஹ்லி இரண்டு சதங்களை அடித்திருந்தார். இந்த இரட்டைச் சதங்கள் தரவரிசையில் விராட் கோஹ்லி முன்னேறுவதற்கு வழிவகுத்தது.

அதன்படி 889 புள்ளிகளுடன் விராட் கோஹ்லி தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள அதேவேளை மற்றுமொரு இந்திய வீரர் ரோஹித் ஷர்மா 799 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.

பந்து வீச்சில் அசத்தும் இந்திய வீரர் பூம்ரா பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளார். மற்றுமொரு இந்திய வீரராக அக்ஷர் பட்டேல் தரவரிசையில் எட்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg