Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனுமதி பெற்று ‘கள்’ இறக்கலாம், இறங்கி வந்தது அமைச்சு!

In இலங்கை
Updated: 17:42 GMT, Oct 31, 2017 | Published: 17:38 GMT, Oct 31, 2017 |
0 Comments
2670
This post was written by : elayathambi

கித்துள் மரம் தவிர பனை தென்னை மரங்களில் இருந்து 2018 ஆம் ஆண்டு முதல், கள் இறங்குவதற்கு அரசு தனது வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை விதித்திருந்தது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 20 ஆம் திகதி வெளியாகி இருந்தது. இதற்கு எதிரான குரல்களும் விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. புகையிலை தடை செய்யப்பட்ட போது அந்த தொழிலை நம்பி வாழ்ந்த பலருக்கு நஷ்டஈடு கொடுக்கவில்லை மாற்று தொழில் வாய்ப்பும் அவர்களுக்கு எற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அதே போலவே கள் இறக்க தடை  விதிக்கப்பட்டால் பால்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் தமது வாழ்பாதாரத்தை இழப்பர் என விமர்சிக்கப்பட்டிருந்தது.

இன் நிலையில் பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.  குறித்த அனுமதிப்பத்திரங்களை கலால் திணைக்களத்தில் அல்லது குறிப்பிட்ட பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை  கித்துள் மரத்திலிருந்து கள் இறக்குவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியமில்லையென நிதியமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மதுவரி கட்டளைச் சட்டத்திலுள்ள தெளிவற்ற தன்மையே இதற்கு காரணமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg