Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற செயற்பாடுகள் இயலாமையை காட்டுகிறது என்கிறார் விமல் வீரவன்ச!

In இலங்கை
Updated: 17:50 GMT, Oct 31, 2017 | Published: 17:50 GMT, Oct 31, 2017 |
0 Comments
1248
This post was written by : Surenth

இலங்கை மக்களுக்கு ஏற்ற வகையில் சட்டத்தை அமைக்க புதிய அரசியலமைப்பின் மூலம் இயலாமல் போயுள்ளதன் காரணமாக நாடாளுமன்றம் பயனற்றது என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றம் தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் செயற்படுவது மக்களின் தேவைகளையும் மக்களின் பிரச்சினைகளையும் பேசுவதற்கு ஆனால் இன்றைய சூழ்நிலையில் அப்படியான நிலைமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதனூடாக சட்டத்தை இயற்ற முடியாமையானது நாடாளுமன்றத்தின் இயலாமையை வெளிக்காட்டுவதாக காணப்படுகின்றது எனவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg