Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேச்சுவார்த்தை தொடர்பில் ஹாப்பரின் விமர்சனத்தை ஏற்க மறுக்கிறார் ஜஸ்ரின்

In கனடா
Updated: 17:49 GMT, Oct 31, 2017 | Published: 17:47 GMT, Oct 31, 2017 |
0 Comments
1240
This post was written by : S.K.Guna

அமெரிக்க சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைகள் (NAFTA) மிகவும் மோசமாக இடம்பெறுவதாக கனேடிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ மறுத்துள்ளார்.

கனடாவின் தற்போதைய லிபரல் அரசாங்கம் வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் தவறிழைப்பதாக ஸ்டீபன் ஹார்ப்பர் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் முன்னைய ஆட்சியாளர்கள் மற்றும் தற்போதைய பிரதமர் அலுவலகத்தின் மரியாதையை மேற்கோள்காட்டி ஸ்டீபன் ஹார்ப்பரின் கடிதத்தின் உள்ளடக்கங்களை நேரடியாக ஒப்புக் கொள்வதற்கு ரூடோ மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக சிறந்த நவீன வர்த்தகத்தை பெறுவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜஸ்ரின் ரூடோ, “ கனடாவுடனான வர்த்தகம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தொடர்பில் அமெரிக்கர்களுக்கு தொடரச்சியாக வலியுறுத்துகின்றோம். கனேடிய வர்த்தகம் சார்ந்த சிறந்த வேலைகள் அமெரிக்காவில் உள்ளன. பேச்சுவார்த்தை அட்டவணையை சூழவுள்ள ஆக்கபூர்வமான மற்றும் உறுதியான கனேடிய நலன்களுக்காக நாம் தொடர்ந்தும் ஊக்குவிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg