Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிராம உத்தியோகத்தரின் மர்ம மரணம்: உடல் தோண்டியெடுப்பு

In இலங்கை
Published: 17:55 GMT, Oct 31, 2017 |
0 Comments
1188
This post was written by : elayathambi
news 2

மட்டக்களப்பு – மண்முனை தெற்கு எருவில் கிராமத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கிராமசேவகரான சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் உடல், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி  சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.றிஸ்வி, சட்ட வைத்திய அதிகாரி இனோகா, சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் சந்திரமணி ஆகியோர் முன்னிலையில், சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) தோண்டியெடுக்கப்பட்டது.  மேலதிக பரிசோதனைகளுக்காக சடலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு, பரிசோதனைகளை பிரதம சட்ட வைத்திய நிபுணர் அஜித் தென்னகோன் மேற்கொள்ளவுள்ளார்.

மட்டக்களப்பு எருவில்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் எனும் கிராமத்தில் கிராம சேவகராக பணியாற்றிவந்த சோமசுந்தரம் விக்னேஸ்வரன், கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.  சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

உயிரிழந்தவரின் குடும்பத்தின் சார்பில் ஆஜராகியிருந்த உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும்  சட்டத்தரணியுமான வி.சந்திரமணி, சடலத்தை தோண்டியெடுத்து மீள் பிரேத பரிசோதனை நடத்த வேண்டுமென மன்றில் கோரியிருந்தார். அதன் பிரகாரம் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், இன்று தோண்டியெடுக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg