Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொழிலற்ற மலையக இளைஞர், யுவதிகளுக்கான சுயதொழில் பயிற்சி

In இலங்கை
Updated: 05:37 GMT, Nov 1, 2017 | Published: 05:32 GMT, Nov 1, 2017 |
0 Comments
1203
This post was written by : Varothayan

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் மலையக மக்கள் முன்னணியும் இணைந்து ‘பெருந்தோட்ட பகுதியில் கன்னியமான தொழில் ஊக்குவிப்பு’ எனும் தலைப்பில் மலைய இளைஞர், யுவதிகளுக்கான ஒரு நாள் சுயதொழில் சம்பந்தமான பயிற்சி செயலமர்வை நடத்தியுள்ளது.

நுவரெலியா கூட்டுறவு விடுதியில் இடம்பெற்ற இப்பயிற்சி போன்று, தொடந்து மலையகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த பயிற்சி செயலமர்வு மூலம் கலந்துக் கொள்ளும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு சுயதொழில் மேற்கொள்ள உதவிகளும் வழங்கப்பட உள்ளன.

இச்செயல் அமர்வினை முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தேசிய திட்டமிடல் இணைப்பு அதிகாரி செல்வி தரங்க குணசிங்க ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ‘மலையகத்தில் தற்போது மலைய இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் இளைஞர் யுவதிகள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்சிக்கு அமைய பயிற்சிகளை பெற்றுக் கொள்ளாமை ஆகும்.

அதனால் தொழில்நுட்ப வளர்சிக்கு அமைய பயிற்சிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறான நிலையிலேயே தொழில் வாய்ப்பு பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும். அதேபோல் பாடசாலைகளில் தற்போது இதற்கான கல்வி முறையும் முன்னெடுக்கபட்டுள்ளன’ என்று கூறினார்.

IMG_4443

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg