Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடிக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் ராகுல் காந்தி!

In இந்தியா
Published: 10:05 GMT, Nov 1, 2017 |
0 Comments
1266
icon_com
This post was written by : Puvanes

இந்தியப் பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை முற்றாக அழித்து விட்டார்கள் என இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

குஜராத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், குஜராத் அரசு விவசாயிகளை புறக்கணித்து விட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் பொருளாதாரம் வீழ்ந்து விட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோடியினால் குஜராத்தில் உள்ள பணம்படைத்தவர்கள் மாத்திரமே பலன் அடைந்துள்ளார்கள் எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, மோடி ஏழைகளுக்கு எதனையும் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார்.

தற்போதைய மோடியின் அரசு மீது பட்டேல் சமூகத்தினர் கடுமையான கோபத்தில் உள்ளார்கள். அந்தக் கோபம் எதிர்வரும் தேர்தலில் வெளிக்காட்டப்படும் எனத் தெரிவித்த ராகுல் காந்தி, மோடிக்கு தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg