Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க அரசாங்கம் புதிய திட்டம்!

In இலங்கை
Published: 11:43 GMT, Nov 1, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Vithushagan
gayantha1

நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர  தொழிற்த்துறைக்கான கடன் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அரசாங்க தகவல்திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ இந்த கடன் திட்டத்திற்கான கேள்விகள் அதிகரித்து வருகின்றமையினால் குறித்த வேலைத்திட்டத்தின் கால எல்லை நிறைவடைவதற்கு முன்னர், முழு நிதியினையும் பயன்படுத்தி சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலாளர்களுக்கான சலுகை கடன் தொகையினை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த கடன் திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி பெரும்பாலானோர் பயனடைய கூடிய வகையில் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகமாக பெற்று கொள்ள வேண்டும்.

இதற்காக, ஆசிய அபிருத்தி வங்கியுடன் இணங்கப்படான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணங்களிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg