Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யூரோ வலய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு

In வணிகம்
Updated: 11:49 GMT, Nov 1, 2017 | Published: 11:47 GMT, Nov 1, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Elakkiya
_97706174_ecbofficereuters

யூரோவை நாணயமாக ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளின் பொருளாதாரம் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டு பகுதி நிறைவில் 0.6 சதவீதத்தினால் வளர்ச்சி அடைந்துள்ளதாக யூரோ புள்ளிவிபர அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூரோ புள்ளிவிபர அலுவலக தகவல்களின் பிரகாரம் கடந்த 12 மாதங்களில் வளர்ச்சி வீதம் 2.5 ஆக இருந்ததாக கூறப்படுகின்றது. அதேவேளை கடந்த செப்டம்பர் மாதம் யூரோ வலய பகுதியில் வேலைவாய்ப்பின்மையானது 8.9 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது கடந்த ஒன்பது வருடங்களில் மிகக் குறைவான எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய மத்திய வங்கி கடந்த மாதம் யூரோ வலயத்தை சேர்ந்த 19 நாடுகளுக்குமான 2017 ஆம் ஆண்டின் வளர்ச்சிக் கணிப்பை 2.2 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg