Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் பயங்கரவாதத் தாக்குதல் தடுக்கப்பட்டது – அமைச்சர்

In ஐரோப்பா
Published: 12:40 GMT, Nov 1, 2017 |
0 Comments
1263
icon_com
This post was written by : Suganthini

ஜேர்மனியில் நடத்தப்படவிருந்த பாரிய பயங்கரவாதத் தாக்குதலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தியுள்ளதாக ஜேர்மனிய உட்துறை அமைச்சர் தோமஸ் டி மைஸியர் (Thomas de Maiziere) தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குற்றச்சாட்டின் பேரில், ஒருவரை பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்தனர். இதனை அடுத்தே, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஜேர்மனியில் நடத்தப்படவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் உரிய வேளையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் முற்றுகை நடவடிக்கையைத் தொடர்ந்தே, இந்தத் தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதேவேளை, தற்போது ஜேர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துக் காணப்படுகின்றது’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜேர்மனியில் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குற்றச்சாட்டின் பேரில், சிரியாவைச் சேர்ந்த 19 வயதான ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர். இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தூண்டுதலின் பேரில் பொதுமக்கள் பலரை இலக்குவைத்து ஜேர்மனியில் குண்டுத் தாக்குதல் நடத்த இந்தச் சந்தேக நபர் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் கூறியிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg