Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனில் நடந்தது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல

In
Updated: 15:22 GMT, Nov 2, 2017 | Published: 10:43 GMT, Nov 2, 2017 |
0 Comments
1274
This post was written by : elayathambi
Covent-Garden-874205

மத்திய லண்டனில் நேற்றுமாலை வாடகைக் கார் ஒன்று மோதியதில் நால்வர் காயங்களுக்கு இலக்காகினர்.காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

நியூ யோர்க்கில்  ட்ரக் வண்டி ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இடம்பெற்று 24 மணி நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

மத்திய லண்டனில் கடைகளும், மதுச் சாலைகளும், சன நெருக்கடியுமுள்ள  சௌத்தம்ரன் வீதியில் இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றது.  ஓடும் வாகனங்களை ஆயுதமாக்கும் பயங்கரவாத நடவடிக்கையாக இதைப் பார்க்க முடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆயினும் இவ் விபத்துக்கான சரியான காரணத்தை அவர்களால் இதுவரை வெளியிட முடியாதுள்ளது. குறித்த வடகைக் காரின் சாரதி பொலிசாரல் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg