Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோட்டன்ஹாம் அணி, ரியல் மாட்ரிட் அணிக்கு அளித்த விருந்து

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:16 GMT, Nov 3, 2017 | Published: 05:14 GMT, Nov 3, 2017 |
0 Comments
1247
This post was written by : Arul Jesu

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் மற்றும் டோட்டன்ஹாம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி லண்டன் வெம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டோட்டன்ஹாம் அணி வீரர் டேல் அலி போட்டி ஆரம்பித்து 27 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

அதன்பின்னர் இரு அணி வீரர்களும் கோல் எதனையும் அடிக்காத காரணத்தால் போட்டியின் முதல் பாதி நேரம் 1-0 என்ற கணக்கில் த்தில் டோட்டன்ஹாம் அணி வசமானது.

இதனை அடுத்து இடம்பெற்ற இரண்டாவது பாதி நேரத்திலும் டோட்டன்ஹாம் வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கவே 56 ஆவது நிமிடத்தில் டேல் அலி மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

எனினும் திருப்திகொள்ளாத டோட்டன்ஹாம் அணி சார்பில் 65 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் மற்றுமொரு கோல் அடித்தார்.

இதனால் டோட்டன்ஹாம் அணி 3-0 என வலுவான முன்னிலைப் பெற்றது.

இதனை அடுத்து கோல் அடிக்க போராடிய ரியல் மாட்ரிட் அணிக்காக நட்சத்திர வீரர் ரொனால்டோ 80 ஆவது நிமிடத்தில் ஆறுதல் கோலை அடித்தார்.

அதன்பின்னர் கோல் அடிக்க முடியாததால் 1-3 என ரியல் மாட்ரிட் அணி டோட்டன்ஹாம் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

201711021611467321_1_1Tottenham001-s._L_styvpf 201711021611467321_2_3Tottenham003-s._L_styvpf

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg