Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரிஸ் டெனிஸ் தொடரில் நடால் மற்றும் சிலிக் ஆகியோர் அசத்தல் வெற்றி

In
Updated: 06:29 GMT, Nov 3, 2017 | Published: 06:29 GMT, Nov 3, 2017 |
0 Comments
1299
This post was written by : Arul Jesu

46 ஆவது பெரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்களான ரபாயல் நடால் மற்றும் மரின் சிலிக் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இதற்கமைய ஸ்பெயினின் ரபாயல் நடால் தனது இரண்டாம் சுற்றில், தென்கொரியாவின் சங் ஹையோனை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எதிர்கொண்டார்.

இதில் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் மூன்றாம் நிலை வீரரான குரோசியாவின் மரின் சிலிக், சக நாட்டு வீரரான போர்னோ கொரிக்கை எதிர்கொண்டார்.

இந்தபோட்டியில் அதிரடியாக விளையாடிய சிலிக் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் போர்னோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இதேவேளை மற்றொரு இரண்டாவது சுற்று போட்டியில் ஆறாம் நிலை வீரரான திமித்ரோ, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ரிச்சர்ட் கேஸ்கட்டை வீழ்த்தினார்.

201711021415265799_1_dimitrov._L_styvpf 201711021415265799_2_goffin._L_styvpf rafael-nadal-afp_806x605_41509557551

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg