Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய நெருக்கடி: ரஷ்யாவின் முயற்சிக்கு பிரான்ஸ் ஆட்சேபம்

In ஐரோப்பா
Updated: 09:44 GMT, Nov 3, 2017 | Published: 09:44 GMT, Nov 3, 2017 |
0 Comments
1205
This post was written by : Suganthini

சிரியாவில் நிலவும் நெருக்கடிக்கு, அரசியல் தீர்வு காணும் வகையில் ரஷ்யா எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு பிரான்ஸ் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

சிரியாவில் நிலவும் நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஐ.நா.வுடன் இணைந்து ரஷ்யா செயற்பட வேண்டுமென, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Agnes Romatet-Espagne வலியுறுத்தியுள்ளார்.

பரிஸில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரியாவில் நிலவும் நெருக்கடிக்கு, அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியை ரஷ்யா எடுத்துள்ளது. இருப்பினும், சிரியாவின் நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்காக ஐ.நா.வுடன் இணைந்தே ரஷ்யா உட்பட சர்வதேச நாடுகள் செயற்பட வேண்டும். இந்நிலையில், சிரியாவில் நிலவும் நெருக்கடிக்கு, ஐ.நா.வின் தலைமையில் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தை முன்னெடுப்பட வேண்டும்’ என்றார்.

‘சிரியாவில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஜெனீவா செயன்முறையின் மூலம் முன்னெடுப்பதே சிறந்தது. குறிப்பாக, புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் தொடர்பில் ஜெனீவா செயன்முறை மட்டுமே பொருத்தமானது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி ரஷ்யா தலைமையிலான மாநாடொன்று, சொச்சி கருங்கடல் பகுதியை அண்டி அமைந்துள்ள விடுதியொன்றில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டுக்கு சிரியாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இதனை அடுத்தே, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சினுடைய பேச்சாளரின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg