Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானின் அணு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்து

In ஐரோப்பா
Published: 10:06 GMT, Nov 3, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Suganthini
iran

ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தம் தொடர்பில் இவர்கள் இருவரும் தொலைபேசி மூலம் நேற்று (வியாழக்கிழமை) கலந்துரையாடியபோதே, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தில் ஒருதலைப்பட்சமான திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஒருதலைப்பட்சமாக முன்னெடுக்கப்படும் திருத்தத்திலிருந்து பாதுகாத்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இவர்கள் இருவரும் வலியுறுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg