Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிகாரங்களை பகிா்ந்துகொள்வதற்கு சிங்கள தலைமைககள் விரும்பவில்லை: விக்னேஸ்வரன்

In இலங்கை
Updated: 12:29 GMT, Nov 3, 2017 | Published: 11:25 GMT, Nov 3, 2017 |
0 Comments
1372
This post was written by : Arul Jesu

ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அதிகாரங்களை தமிழ் பேசும் மக்களுடன் சிங்கள தலைவர்கள் பகிர்ந்து கொள்ள மறுப்பதே இன்றைய பிரச்சினைக்கு காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு அகிகார பகிர்வு வழங்கப்படக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துக்கு, வாரம் ஒரு கேள்வி பகுதியில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன முரண்பாட்டுக்கான காரணம் சிங்கள அரசியல்வாதிகள் நாடு முழுவதும் தமது அரசியல் அதிகாரங்களை தம்வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அதிகாரங்களை தமிழ் பேசும் மக்களுடன் சிங்கள தலைவர்கள் பகிர்ந்து கொள்ள மறுப்பதே இன்றைய பிரச்சினைக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருந்த போது விட்டுக் கொடுக்க முன்வந்தவர்கள், புலிகள் அழிந்ததும் பழைய நிலைக்கே மாறிவிட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மத்தியில் அதிகாரப் பகிர்வு பற்றி எவ்வித மனமாற்றமும் இல்லை எனவும், அவர் ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப்பகிர்வையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும். தமிழர்கள், முஸ்லிம்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மையினர் மதத்திற்கு முன்னுரிமை கேட்பது மதத்திற்கு பங்கம் வரும் என்பதற்காக அல்ல. மாறாக மதத்தைக் காரணம் காட்டி சிறுபான்மையினரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களின் துயரங்களைத் துடைக்க உதவாது எனவும் மீண்டும் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தின் கீழ் நாம் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து போராட வேண்டிய நிலையே ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg