Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான பிட்டுக்கொத்து!

In
Updated: 11:51 GMT, Nov 28, 2017 | Published: 11:32 GMT, Nov 28, 2017 |
0 Comments
1374
icon_com
This post was written by : Vithushagan
15871485_1196016367112084_6130904613167858831_n

தேவையான பொருட்கள்

கோதுமை மா -500கிராம்
கரட் -200 கிராம்
உருளைக்கிழங்கு -300கிராம்
லீக்ஸ்- 150கிராம்
கத்தரிக்காய்- 150கிராம்
பெரியவெங்காயம்- 150கிராம்
பச்சை மிளகாய்- 8
தேங்காய்த்துருவல் -அரை கப்
மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் , உப்பு, வெந்நீர்- தேவையானளவு
தாளிக்க
சிறிய வெங்காயம்- 100கிராம்
கறிவேப்பிலை- 50கிராம்
நற்சீரகம் -1 தேக்கரண்டி
செத்தல்மிளகாய் -4

செய்முறை

கரட் , லீக்ஸ் , கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் என்பனவற்றை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி தனித்தனியாக வைக்கவும். அதன் பின்னர் உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

மிளகாய் தூள் சேர்த்து பொரித்தெடுத்த மரக்கறிகளை நன்கு கலக்கவும்.

பச்சை மிளகாயை சிறிது சிறிதாக நறுக்கி உப்பு சேர்த்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் இட்டு பச்சைவாடை போகும் வரை வதக்கி எடுக்கவும்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ,சிறிய வெங்காயம் , கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் நற்சீரகம் , செத்தல்மிளகாய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

கோதுமை மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, வெந்நீர் விட்டு கிளறி, பிட்டு மாவினை தயார் செய்த பின்னர் தேங்காய்த்துருவல் சேர்த்து பிட்டினை ஸ்டீமாரில் வைத்து அவிக்கவும்.

சூடான பிட்டுடன் பொரித்த மரக்கறிகள், பச்சை மிளகாய் , தாளிசத்தையும் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். சூடான பிட்டுக்கொத்து தயார்.

அசைவப்பிரியர்கள் ,முட்டை ,இறால் என்பவற்றை பொரித்து இதனுடன் சேர்த்து சுவைக்கலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg