Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடர் மழையால் அதிகரிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்

In இந்தியா
Updated: 11:39 GMT, Nov 3, 2017 | Published: 11:38 GMT, Nov 3, 2017 |
0 Comments
1794
This post was written by : Varothayan

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்க கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாட்களாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்த கன மழையால் தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1980 கன அடி நீர்வரத்து உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஏரியின் மொத்த கொள்ளளவாக 3,645 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், நேற்றைய நிலவரப்படி நேற்று ஒரே நாளில் 165 மில்லியன் கன அடி நீர் உயர்ந்து தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 617 மில்லியன் கன அடியாக உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளம் ஏற்படுத்திய பெரும் அழிவுகளில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அளவுக்கதிகமாக அதிகரித்தமை முக்கிய காரணமாக பேசப்பட்டது. இந்நிலையில், சென்னை மக்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் கடந்த 6 மாதங்களாக வறண்டு கிடந்த ஏரி, குளங்களின் நீர்மட்டம் தற்போது மீண்டும் உயர தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg