Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் வாழ்வாதார உதவித்திட்டங்கள்

In இலங்கை
Published: 12:36 GMT, Nov 3, 2017 |
0 Comments
1530
icon_com
This post was written by : Arul Jesu

மன்னார் மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 350 பயனாளிகளுக்கு மீள் குடியேற்ற அமைச்சினால் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதேசச் செயலகங்களினூடாக வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஒவ்வெரு பயனாளிகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மீள் குடியேற்ற அமைச்சர் ரி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டு குறித்த சுய தொழில் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 250 பயனாளிகளுக்கு சுய தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மன்னார் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 250 பயனாளிகளில் முதற்கட்டமாக அமைச்சர் ரி.எம்.சுவாமிநாதனால் 15 பயனாளிகளுக்கு சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

DSC_0036 DSC_0101 DSC_0063 DSC_0031 DSC_0027

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg