Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாயை சூனியக்காரி எனக் கூறி கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை!

In கனடா
Published: 12:50 GMT, Nov 3, 2017 |
0 Comments
1088
icon_com
This post was written by : Anojkiyan
cha

வன்கூவரில் தாயை சூனியக்காரி எனக் கூறி கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பிரையன் வைட்லொக் என்பவர் தனது 61 வயதுடைய தாயை தலை மற்றும் கழுத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலைசெய்தார்.

தற்போது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஆயுள் தண்டனையுடன், 12வருடங்களிற்கு பரோலில் வர முடியாத வகையில் கடூழிய தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2012ஆம் ஆண்டு ஜேர்மன் செப்பேட் வகையான நாயை பேஸ் போல் மட்டையால் அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக மிருக வதை குற்றம் சுமத்தப்பட்டு 60 நாட்கள் சிறைத்தண்டனையும் விலங்கு உரிமை மீது வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg