Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னையில் மழை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைப்பு!

In இந்தியா
Updated: 07:58 GMT, Nov 4, 2017 | Published: 05:03 GMT, Nov 4, 2017 |
0 Comments
1455
This post was written by : Vithushagan

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக  இன்று (சனிக்கிழமை) நடை பெறவிருந்த பல்கலைக்கழக பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக  பரீட்சைகள் இவ்வாறு  பிற்போடப்பட்டுள்ளனஃ

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பொழிவு காணப்படுகிறது. கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நேற்று நடைபெற இருந்த பரீட்சைகளும்  பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg