Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற காலநிலை: சென்னை விமான நிலையத்தின் சேவைகள் பாதிப்பு!

In
Updated: 05:35 GMT, Nov 4, 2017 | Published: 05:19 GMT, Nov 4, 2017 |
0 Comments
1441
This post was written by : Vithushagan

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சாலைகளில் தேங்கிய மழை நீர் வடியாமல் உள்ள பகுதிகளில் இன்னும் போக்குவரத்து சீரடையவில்லை.

இன்று காலை முதலே சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் செல்லும் 4 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg