Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜோகோவிச்சின் பின்னடைவிற்கு காரணம் என்ன?

In டெனிஸ்
Published: 05:33 GMT, Nov 4, 2017 |
0 Comments
1211
This post was written by : Surenth
Djokovic

டென்னிஸ் தரவரிசை பட்டியலில் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள நிலையில், 7ஆவது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் முதல் 10 இடங்களில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரிஸில் நடந்து வரும் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அர்ஜென்டினா வீரர் மார்ட்ன் டெல் போட்ரோ கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்த வெற்றியை அடுத்து மார்ட்ன் டெல் போட்ரோ தரவரிசையில் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஜோகோவிச் பின் தள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

செர்பியாவை சேர்ந்த, முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 12 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின்போது முழங்கையில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்ததால் தரவரிசை பட்டியலில் 7ஆவது இடத்தில் இருந்து 10 இடங்களுக்கு பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக டென்னிஸ் விளையாடிவரும் ஜோகோவிச் முதல் 10 இடங்களுக்கு இடம்பெறாமை இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg